என்னப்பா அறிவிச்சடலாமா?-த.வெ.க. அதிரடி

என்னப்பா அறிவிச்சடலாமா?-த.வெ.க. அதிரடி

நாளைய தீர்பின் இன்றைய முழக்கம் -“பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கிளப்பட்டுமா, கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா”. என்னப்பா ஆரம்பிக்கலாமா? -த.வெ.க. அதிரடி

பனையூர் தமிழக வெற்றிக்கழக அலுவலகம்:

சூடு பிடித்தது பனையூர் தமிழக வெற்றிக்கழக அலுவலகம், “என்னன்னு கேக்குறீங்களா” இன்று அதாவது ஆகஸ்ட் 22 விஜய் அவர்கள் தன் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் கட்சியினுடைய கட்சிக்கொடியை அறிமுகப்படுத்துகிறார். “அட உண்மைதாங்க” இதனால விஜய் ரசிகர்கள் மிகுந்த அன்போடும், ஆரவாரத்தோடையும் வெயிட் பண்ணிட்டு இருந்த விஷயம் நடந்துகிட்டு இருக்கு. இப்போ இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை பற்றி கொஞ்சம் விரிவா பார்க்கலாமா.

இதையும் கொஞ்சம் பாத்திருங்க:தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி

தமிழக வெற்றிக் கழகம்:

நடிகர் விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவை விட்டு வெளியேறி கட்சி ஆரம்பிக்க போறதாவும், அந்த கட்சியோட பேரு “தமிழக வெற்றிக் கழகம்” அப்படின்னு அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து விஜய் ரசிகர்கள் வேதனையா இருந்தாலும் பெருமையா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஆனா நடக்குற நிகழ்வுகளை வெச்சு பார்த்தா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில வெளிவர இருக்க “கோட்” படத்தோட அப்டேட், கட்சிக்கொடி அறிமுகம்னு ஏகப்பட்ட சந்தோசமான விஷயங்கள் எல்லாம் நடந்துட்டே வந்துகிட்டு இருக்கு. எஸ், இன்னைக்கு என்ன நடக்குது பனையூர்ல…

ஆகஸ்ட் 22 2024 இன்று காலையிலிருந்து பனையூர்ல ஆர்ப்பரிப்பு நடந்துட்டே தான் இருக்கு காலை 9 மணிக்கு மேல கொடி அறிமுகம்னு, அதுக்கப்புறம் தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடல்னும் அமர்க்களப்பட போகுதுன்னு சொல்லலாம். தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்திற்கு காலையிலேயே ரசிகர்களும், தொண்டர்களும் நிறைய பேரு வந்துட்டே இருக்க, புஷி ஆனந்த் எல்லாரையும் வரவேற்றார்.

கேப்டன் விஜயகாந்த் பாணி:

அலுவலகத்துக்கு வந்தவங்கள புஷி ஆனந்த் முதல்ல போய் சாப்பிடுங்கன்னு எல்லாரையும் சாப்பிட விதத்தை பார்க்கும் போது, இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல்ல, எஸ் இது நம்ம கேப்டன் விஜயகாந்த் அவருடைய வழக்கம் தான். அதை இவங்களும் அப்படியே பாலோ பண்ணி இருந்தாலும் வந்தவங்களுக்கு சோறு போடுறது நல்ல விஷயம் தானே. நல்லது பண்ணா பாராட்டலாமே “என்ன நான் சொல்றது”. வந்தவங்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், உளுந்து வடை, கேசரி, காரச்சட்னி, தேங்காய் சட்னி மற்றும் முருங்கக்காய் சாம்பார் வழங்கப்பட்டது.

விழா ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே விஜய் ஓட அப்பா S.A.சந்திரசேகர் அவர்களும் தாயார் ஷோபனா அவர்களும் வந்தாங்க. அலுவலகத்துக்கு வந்த விஜய் உடைய தாய் மற்றும் தந்தையை புஷி ஆனந்த் அவர்களோட கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டாரு. மேலும் அவங்க ரெண்டு பேருமே தொண்டர்களோடு தொண்டர்களாக வந்து தொண்டர்கள் உட்காரும் பகுதியில உட்கார்ந்தாங்க.

 இது தளபதியோட என்ட்ரி:

மேலும் நேரமாக ஆக தொண்டர்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க தமிழக வெற்றிக்கலகம் அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துட்டு இருக்க எஸ் இது தளபதியோட என்ட்ரி.

வீட்டிலிருந்த தளபதி கார்ல பனையூர் கிளம்பிட்டார். ஆமா விஜய் ஓட கார் நம்பர் 1111 கூட்டுனா 1+1+1+1=4, வருது இந்த நிகழ்ச்சியின் நடக்கிறது ஆகஸ்ட் 22, ரெண்டு இரண்டையும் கூட்டினால் நான்கு(2+2=4). விஜய் அவர்களோட பிறந்த நாளும் 22ஆம் தேதி தான் 2+2=4 அப்போ விஜய்க்கும் இந்த நாலாம் நம்பருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ?

சரி அதை விடுவோம் நிகழ்ச்சி பார்க்கலாம். தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்திற்கு நம்ம விஜய்னுடைய மாஸ் என்ட்ரி “தீ இது தளபதி, பெயரைக் கேட்டு விசில் அடி” அடடா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஹைலைட் இருக்கு அது என்ன தெரியுமா? தமிழக வெற்றிக் கழகத்தினுடைய பாடல் வெளியீட்டு விழா. அட ஆமாங்க தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒரு பாட்டு இருக்கு. இந்தப் பாடலை எழுதியவர் “விவேக்” அவர்கள் இசையமைத்தவர் இசையமைப்பாளர் “தமன்” அவர்கள்.

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி:

விழாவிற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் வந்தவுடன் எல்லோருக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கொடி மஞ்சள் நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் இருந்தது.

இரண்டு பக்கமும் யானை சீரிட்டு இருப்பது போலவும் உள்ளது. நடுவில் வாகை மலர் இருக்கு. வாகை மலர சுற்றியும் நட்சத்திரங்கள் போலவும் இருக்கு, இந்த கொடிக்கான அர்த்தம், மலர் அப்படிங்கறது ஒரு அமைதியான ஒன்று, யானைகள் என்பது மிகவும் பலமான ஒன்று. ஒரு மென்மையான ஒரு விஷயத்தை பாதுகாக்க கம்பீரமான பாதுகாப்பு தேவை அப்படிங்கிற மாதிரி கட்சிக்கொடி உள்ளதா? இல்லை  மென்மையான மக்களை பாதுகாக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற யானை போல் பலமான ஒரு கட்சி உள்ளது இனி நீங்கள் பயப்பட தேவை இல்லை என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவா என்பது பின்னாளில் தெரியவரும்.

விஜய் மேடை ஏறி என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பார்ந்த தமிழக மக்கள் மற்றும்  உங்கள் முன்பு இந்த கொடியை அறிமுகப்படுத்துவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இந்த கொடிக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் சொல்லிட்டு இருந்தபோது விஜய் அவர்களே இந்த கொடிக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது அந்த வரலாறை நம் கட்சி மாநில மாநாட்டில் கூறுகிறேன் என்று ஒரு ட்விஸ்ட் கொடுத்தார்.

ஆம் எல்லோரும் நினைப்பது போலவே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது.

அந்த மாநில மாநாடு, தேதி, இடம் போன்றவற்றை ஆலோசித்து வருகிறோம். நீங்க எல்லாரும் நினைச்ச மாதிரி தமிழக வெற்றிக் கழகம் கட்சியினுடைய மாநில மாநாடு வேலைகள் சிறப்பாக நடந்துட்டு இருப்பதாகவும் அதை பத்தின தகவல் பின்னர் அறிவிக்கப்படும் அப்படின்னு சொல்லி இருக்காரு.

மேலும் இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்திருப்போம் இனி தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சிக்கும் நாம் சேர்ந்து உழைப்போம் அப்படின்னு எல்லாரையும் உத்வேகப்படுத்தினார். இந்தக் கட்சிக்கொடியை வெறும் கட்சிக்கொடியாய் பார்க்கவில்லை தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன்.

இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் என்னை கேட்காமலேயே ஏற்றுவீர்கள் என்று நம்புகிறேன். “நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” நன்றி என்று கூறினார்.

உறுதிமொழி:

இன்னொரு முக்கிய நிகழ்வு என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அலுவலகத்துக்கு வந்து மேடை ஏறிய பின்பு உறுதிமொழி ஒன்றை அவரும் தன் தொண்டர்களும் ஏற்றினார் அந்த உறுதிமொழி பின் வருமாறு.

நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம் மத நல்லிணக்கம் சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன். மக்களாட்சி மதச்சார்பின்மை சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி மதம் பாலினம் பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

இந்த உறுதி மொழியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் அவர்களது தொண்டர்களும் இந்த உறுதிமொழிய மனமார ஏத்துக்கிட்டாங்க.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply