த.வெ.க மாநாட்டிற்கு சிக்கலா?

த.வெ.க மாநாட்டிற்கு சிக்கலா?

முதல் மாநில மாநாடு விவரம்:

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் கட்சியின் முதல் மாநில மாநாடு விவரம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அதாவது 27-10-2024 அன்று மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார். த.வெ.க மாநாட்டிற்கு சிக்கலா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் செப்டம்பர்  மாதம் 20ஆம் தேதி அதாவது 20-9-2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,

மறந்துறாம இதையும் பாத்திருங்க:தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி

வெளியிடப்பட்ட அறிக்கையில்:

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாட்டு மக்களில் பேரன்புடனும், பேராதரவுடன் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின் போது, நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி 27-10-2024 அன்று மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது.. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

என்று அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில் பொருத்தப்பட்டுள்ள விஜயின் புகைப்படம் மாற்றி கட்சிக்கொடியுடனும் வெள்ளை சட்டையுடனும் விஜயின் புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரு சர்ச்சையில் வெடித்துள்ளது அது என்னவென்றால் இதற்கு முன்பு இருந்த புகைப்படத்தில் நெற்றியில் பொட்டு இருந்ததாகவும், இந்த புகைப்படத்தில் பொட்டு இல்லா புகைப்படம் இருப்பதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது.

(ஒரு பொட்டுக்கு போரா? என்னையா…….) என்பது போல் உள்ளது.

மாநாட்டிற்கு சிக்கல்:

வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடக்க இருக்கும் மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்கு படாதபாடு ஆயிருக்கும் போல. ஏனென்றால் அதற்கு நிறைய கட்டளைகளும் விதிக்கப்பட்டு இருந்தது. மாநாடு நடத்தும் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பாதுகாப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளும் ஆலோசிக்கப்பட்டதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

காவல்துறைக்கு எந்தவித கலங்கமும் வராமல் பார்த்து செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தளபதி விஜய் அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு மிக்க மனிதர் அவரை காண மக்கள் கூட்டம் பெரிய அளவில் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆதலால் மாநாட்டிற்கு வரும் பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்களுக்கு என்று யாருக்கும் எந்த விதமான அசௌகரியமான சூழ்நிலைகள் வந்து விடக்கூடாது என்று முனைப்பில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக வழியுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் அனுமதி வழங்குவதற்காக சில கேள்விகளும் கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில்களும் அளிக்கப்பட்டு அனுமதி பெற்று இருக்கிறார்கள். காவல்துறை சார்பில் மாநில மாநாட்டிற்காக அனுமதி வழங்குவதற்கு கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? அதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கூறிய பதில்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.

கேள்விகளும்-பதில்களும்:

1.மாநாடு எந்த நேரத்தில் தொடங்கி எப்போது முடிக்கப்படும்?

பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறும்.

2.மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம் என்ன?

மாநாடு நடைபெறும் இடத்தில் பெரிய கொடிக்கம்பத்தில்  தலைவர் விஜய் கொடியேற்றுகிறார்.

3.திட்டமிட்டுள்ள மாநாடு நடக்கும் இடத்தில் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

ஆம் பெறப்பட்டுள்ளது.

4.மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் பெயர் பட்டியல் விவரம்?

விஜய் தலைமையில் மாநாடு.

5.மாநாடு நடக்கும் மேடையில் அளவு என்ன?

மாநாடு 85 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறுகிறது.

6.விழா மேடை மற்றும் மாநாட்டில் எத்தனை நாற்காலிகள் போடப்பட உள்ளன?

ஆண்கள் – 30 ஆயிரம்,

பெண்கள் – 15 ஆயிரம்,

முதியவர் 5000,

மாற்றுத்திறனாளிகள் -500,

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

7.பேனர்கள் எந்த எண்ணிக்கையில் வைக்கப்பட உள்ளது? அலங்கார வளைவுகளில் விவரம் என்ன?

70க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்படும்.

8.பந்தல் ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விவரம் என்ன?

ஒலிபெருக்கி ஒப்பந்தம் ஜே.பி எண்டர்பிரைசஸ்.

9.மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்?

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 1000 பேர் கலந்து கொள்வார்கள்.

10.மாநாட்டிற்கு யாருடைய தலைமையில் வருவார்கள்?

——————

11.மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதா?

ஐந்து ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

12.வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் தனியார் பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா?

தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

13.பெண்கள் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் என்னென்ன?

பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தனித்தனி இருக்கைகள் அமைக்கப்ட உள்ளது.

14.குடிநீர் மற்றும் கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் விவரம் தேவை?

குடிநீர் பாட்டில் வழங்கப்படும் தற்காலிகமாக ஆண்கள் கழிவறை 100 மகளிர் கழிவறை 150.

15.உணவு பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளதா? அல்லது சமயல் கூடம் அமைக்கப்படுகிறது?

சுகாதாரமான உணவு கூடம் அமைத்து பார்சலில் உணவு விநியோகிக்கப்படும்.

16.தீ விபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம் என்ன?

தீயணைப்பு மீட்பு பணிகளுக்கான வாகனங்கள், உபகரணங்கள் அமைக்கப்படும்.

17.மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதா?

மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய சுகாதாரத்துறை இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

18.மாநாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

14 வழிகள் அமைக்கப்பட உள்ளன.

19.கட்சியில் தலைவர் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விவரம்?

நான்கு வழிகள் அமைக்கப்படும்.

20.வாகனங்கள் இருக்கும் இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியில் செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

ஐந்து -ஆறு வழிகள் அமைக்கப்படும்.

21.மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விவரம்?

ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறப்படும்.

இத்தகைய கேள்விகளுக்கு முறையான பதில்களை அளித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் தளபதியிலிருந்து தலைவர் என்ற அந்தஸ்து பெற்று இன்று நம் கண்முன் இருக்கும் விஜய் அவர்கள், அரசியலில் ஒரு பெரும் புரட்சி செய்வார் என்று நம்புவோம்.

மேலும் ரசிகர்கள், தொண்டர்களுடன் நாமும் சேர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே.

“ஆல் தி பெஸ்ட் விஜய் சார்”.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply