தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி

தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி

தமிழக வெற்றிக் கழகம்:

நடிகர் விஜய் அவர்களுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்றப்பட்டு, கட்சியின் பாடல் வெளியிடப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சி அதிரடி காட்டி வராங்க. நடிகர் விஜய் அவர்களுடைய பனையூர் அலுவலகமான தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் கொடியேற்றும் நிகழ்ச்சி ஆரவாரமா கொண்டாடப்பட்டது. தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி.

அந்த நிகழ்வில் தான், “தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது”ன்னு அதிரடியான பாடல் வரிகளோடு பாட்டு ஆரம்பிச்சது. முக்கியமா சொல்லணும்னா அந்தப் பாட்டை பார்க்கும்போது நிறைய பேருக்கு கண்ணு வேர்த்திருச்சு’னே சொல்லலாம். இவ்வளவு ஏன்? நம்ம புஷி ஆனந்திர்க்கோ கண்ணுல வேர்வையோ வேர்வை. தளபதி பக்கத்துல உக்காந்துட்டு “கே”னு அழுதுட்டாரு. ஒருவேளை இதுதான் சந்தோஷக் கண்ணீரோ தளபதி விஜயும் ஆனந்தத்தில் மூழ்கிட்டருன்னு சொல்லலாம்.

இந்தப் பாட்டோட பெரிய பிளஸ் பாயிண்ட் என்னன்னா எல்லாருக்கும் புரியும்படியாக எளிய தமிழ் சொற்களால இந்த பாடல் வரிகள் பாடலாசிரியர் “விவேக்” அவர்களால எழுதப்பட்டு இருக்கு அப்படிங்கறது தான். இசையும் இசையமைப்பாளர் “தமன்” அவர்கள் நல்லாவே இசையமைச்சு கொடுத்திருக்காரு.

இப்போ இந்தப் பாடல் வரிகள நாம கொஞ்சம் பார்ப்போமா?

இதையும் மறந்துறாம பாத்திருங்க:என்னப்பா அறிவிச்சடலாமா?-த.வெ.க. அதிரடி

தமிழக வெற்றிக்கழகத்தின் பாடல் வரிகள்:

மனமே மனமே வா வா நிஜமே

கொடியே கொடியே காவல் கொடியே

தலைவா தலைவா காவல் தரவா

வெற்றிகழக கொடி ஏறுது நம்ம சனத்தின் விதி மாறுது,வெற்றிகழக கொடி ஏறுது மக்கள் ஆசை நிஜமாகுது

வெற்றிகழக கொடி ஏறுது நம்ம சனத்தின் விதி மாறுது,வெற்றிகழக கொடி ஏறுது மக்கள் ஆசை நிஜமாகுது

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது. இப்படி ஆரம்பத்திலேயே தன் வரிகளால அதிரடி காட்டி இருக்காரு பாடலாசிரியர் விவேக் அவர்கள் இன்னும் சொல்லப்போனால்,

மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது,

சிறுசும் பெருசும் ரசிக்கிது சிங்கப்பெண்கள் சிரிக்குது

மக்களோட தொப்புள் கொடியில் முளைச்ச கொடியும் பறக்குது

மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரம் இது

மக்களும் அவன மனசுல வச்சு ஆடி பாடி கூப்பிடுது

சீக்கிரம் கெடச்ச பின்னும் இறங்கி வந்த செவை செஞ்சு நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது.

தமிழா தமிழா நம்ம வாழப் போறோமே

ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போக போறோமே

தமிழன் கொடி தலைவன் கொடி தர்ம கொடி தரையின் கொடி வீரக்கொடி விஜய கொடி ஆதிக்குடிய காக்கும் கொடி தமிழன் கொடி தலைவன் கொடி தர்ம கொடி தரையின் கொடி வீரக்கொடி விஜயக்கொடி ஆதி கூடிய காக்கும் கொடி

ரத்த சிவப்பில் நிறம் எடுத்தோம் ரெட்ட யானை பலம் கொடுத்தோம்

நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி கொடியில் உரு கொடுத்தோம்

மஞ்சள் எடுத்து அலங்கரித்தோம் பச்சை நிற திலகம் வெச்சோம் பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றத பறை அடிச்சோம்

தூரம் நின்னு பார்க்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது, தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி, “அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போறான் தமிழன் கொடி”

தமிழன் கொடி தலைவன் கொடி தர்ம கொடி தரையின் கொடி வீரக்கொடி விஜய கொடி ஆதிக்குடிய காக்கும் கொடி தமிழன் கொடி தலைவன் கொடி தர்ம கொடி தரையின் கொடி வீரக்கொடி வெற்றிவாகை சூடபோற விஜய கொடி மக்கள் கொடி…

தமிழன் கொடி பறக்குது…

அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போறான் தமிழன் கொடி:

இப்படிப்பட்ட வரியில் பாடல் ஆசிரியர் “விவேக்” அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியினுடைய பாடல் மூலமாக நம்ம மனசுல இடம் பிடித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆளும் கட்சியை அங்கங்க தாக்கும் விதமாகவும் சில வரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதுலயும் குறிப்பா “தூரம் நின்னு பார்க்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது, தோளில் வந்து கையைப் போடும் தலைவன் கொடி ஏறுது” இந்த வரிகளுக்கு ஏற்றவாறு காட்சி அமைப்பும் தளபதி விஜய் அவர்கள் பள்ளி குழந்தைகள் மேல தோளில் கையை போட்டு நிற்பது போல் காட்சிகளும் அமைக்கப்பட்டு இருக்கு.

முக்கியமா சொல்லணும்னா, “அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி, அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போறான் தமிழன் கொடி” என்ற வார்த்தை ஆளுங்கட்சியை கேள்வி கேட்கிறதோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

மேலும் இந்த பாடல் காட்சி அமைக்கும் போது முதலில் இரண்டு யானைகள் வருவது போலவும், அது மக்களை அச்சுறுத்துவது போலவும் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அதை காப்பாற்றுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை பார்க்கும் போது இரண்டு பெரிய கட்சிகளுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் கட்சி வெற்றிவாகை சூடும் என்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை பற்றியும் அந்த கட்சியினுடைய பாடல் பற்றியும் பல்வேறு தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள் யார் என்ன சொன்னார்கள் என்பதை பார்க்கலாம்.

பல்வேறு கட்சி தலைவர்கள் கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு ஆனந்தன் அவர்கள்:

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு ஆனந்தன் தனது எக்ஸ் தளத்தில் கூறியது, தமிழக வெற்றி கழகத்தின் கட்சியினுடைய கட்சி கொடி அறிமுகப்படுத்தி இருக்கு. அந்த கட்சி கொடியில் சிகப்பு நிறமும், மஞ்சள் நிறமும் இரண்டு பக்கம் யானை படமும், நடுவில் வாகை மலரும் பொறிக்கப்பட்டு இருக்கிறது

அதாவது 1968 ஆம் ஆண்டு “சிம்பல்ஸ் அலாட்மென்ட் ஆக்ட்” படி எலக்சன் கமிஷனில் 2003 அன்று ஒரு அலாட்மென்ட் செய்து 2004 நோட்டிபிகேஷன் கொடுத்து யானை சின்னத்தை, அசாம் சிக்கிம்’ஐ தவிர வேறு எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆனாலும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஆக இருந்தாலும், மாநிலக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் யாரும் யானை சின்னத்தை எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷனின் உத்தரவு உள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொடியை வடிவமைக்கும் போது இந்த சட்டம் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினால் அந்தக் கட்சியில் மேனேஜர் ‘திரு வெங்கட்’ என்பவரை தொடர்பு கொண்டு அந்த சட்டத்திற்கான ஆவணங்களையும் திட்டத்திற்கான நகல்களையும் அனுப்பி உள்ளோம். அவர்கள் இது சம்பந்தமாக பேசி ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியினுடைய மாநில தலைவர் திரு ஆனந்தம் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள்:

தமிழக வெற்றி கழகம் கட்சிக்கொடி மற்றும் பாடல் வெளியீட்டை குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கேட்டபோது, நிகழ்ச்சியில் இருந்ததால் பார்க்கவில்லை என்றும் நான் பார்த்துவிட்டு கூறுகிறேன் என்றும் கூறிவிட்டு கிளம்பினார்.

எல் முருகன் அவர்கள்:

எல் முருகன் கூறியதாவது, நம் நாடு ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம், கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்யலாம். நம் நாட்டில் அப்படி வருபவர்களை நாங்கள் எப்போதும் வரவேற்ப்போம் என்று என் முருகன் கூறினார்.

வானதி சீனிவாசன் அவர்கள்:

வானதி சீனிவாசன் கூறியதாவது, தமிழகம் இதுபோல நூற்றுக்கணக்கானகொடிகளை பார்த்திருக்கிறது, நூற்றுக்கணக்கான தலைவர்களை பார்த்து இருக்கிறது, அதில் ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள் ஒரு சிலர் வெற்றி பெறுவதில்லை மேலும் திரு விஜய் அவர்கள் ஒரு நல்ல நடிகர்.

ஒருவர் ஏதாவது தொடங்கினார்கள் என்றால் நம் எப்போதுமே வாழ்த்துக்களை தெரிவிப்போம் அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிகிறோம். வாழ்த்துக்கள் இன்று வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்:

தமிழிசை சௌந்தரராஜன் கோயில் ஏதாவது இன்று அவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் விமர்சியாக கொடியேற்று விழா நடந்தது நான் விமர்சனங்களும் வரும் கொடி ஏற ஏற விமர்சனங்களும் ஏறிக்கொண்டே தான் போகும் அரசியல் விமர்சனங்கள் வருவது சகஜம் தான் இன்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply