சொம்பு தூக்கியதா விஜய் டிவி

சொம்பு தூக்கியதா விஜய் டிவி

சொம்பு தூக்கியதா விஜய் டிவி. சமீக காலமாகவே சமூக பக்கத்தை திறந்தாலே இவங்க ரெண்டு பேரு சண்டை தான் பெரிதும் காட்டப்பட்டு கொண்டு இருக்கிறது. யார் இவர்கள்? இவர்கள் ஏன் சண்டை போட்டு கொள்ளவேண்டும் என்று அலசி ஆராய்ஞ்சு பார்த்தால் ஏகப்பட்ட தகவல்களும், ஏகப்பட்ட கிசுகிசுக்களும் நமக்கு கிடைத்தது தான் மிச்சம். என்னன்ன தகல்வல்கள் என்னன்ன கிசுகிசுக்கள் வாங்க நம்மளும் அதை அலசுவோம்.

நான் எவர்களுடைய சண்டையை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஆம் நம் குக் வித் கோமாளி சீசன்-5 ஷோ’வில் நடந்ததை தான். மணிமேகலை vs பிரியங்கா தேஷ்பாண்டே. இவர்கள் இருவருமே வீடியோ ஜாக்கி யில் கில்லிகள் என்றே சொல்லலாம் ஆனால் இவர்களுக்குள் எப்படி சண்டை முற்றி போனது?

குக் வித் கோமாளி:

விஜய் டிவியில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். விஜய் டிவியில் ஏகப்பட்ட ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டாலும் குக் வித் கோமாளி போன்ற ஷோ தான் பெஸ்ட். குக் வித் கோமாளி கடந்த நான்கு சீசன்களும் பெஸ்ட் என்று சொல்லலாம். ஆனால் இந்த சீசன் 5 விற்க்கு என்ன நடந்தது.

கடந்த நான்கு சீசன்களில் கொடி கட்டி பறந்த குக் வித் கோமாளி, சீசன் 5 வில் முடங்கியது எப்படி? இதற்கு பதில் என்னவென்றால் கடந்த நான்கு சீசனாக இயங்கி வந்த மீடியா மிசன் ப்ரொடக்ஷன் தான் ஏனென்றால் இவர்கள்தான் முதலில் குக் வித் கோமாளி ஷோவை நடத்தி வந்தனர் பின்பு விஜய் டிவிக்கும் மீடியா மிஷன் ப்ரொடக்ஷன் கம்பெனிக்கும் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் சன் தொலைக்காட்சிக்கு “டாப் குக் டூப் குக்” என்ற நிகழ்ச்சியை வழங்குவதற்கு விஜய் டிவியை விட்டு சென்றனர்.

ஆனால் விஜய் டிவியோ குக் வித் கோமாளி ஷோவை வேறு மீடியா அதாவது பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ விற்கு வழங்கி அதை நடத்திக் கொடுக்குமாறு கேட்க பின்பு இறங்கியது தான் இந்த கம்பெனி இதில் ஏதாவது வித்தியாசமாக கொண்டு வர வேண்டும். நான்கு சீசனை விட இந்த சீசன் மிகவும் ஹிட்டாக வேண்டும் என்று முனைப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

மறக்காம இதையும் பாத்திருங்க:கோட் ஒரு அலசல்-பகுதி-2

ஏனென்றால் நான்கு சீசனாக இருந்த எந்த காமெடியும் இந்த சீசனில் எடுபடவில்லை என்று சொல்லலாம். குக் வித் கோமாளி ஷோவில் கோமாளிகளாக கலக்கி கொண்டு வரும் குரேஷி, புகழ், சுனிதா, தங்கதுரை என்று ஒரு பட்டாளமே இருக்கிறது. ஆனால் போன சீசன் வரை இருந்த பாலா இந்த சீசனில் இல்லை ஆனால் அதற்கு பதிலாக வேறு சில புதிய கோமாளிகளை அறிமுகப்படுத்தியிருந்தது. அவர்கள் விஜய் டிவி ராமர், ஆர் ஜே கெமி, போன்றவர்கள் இந்த சீசனில் அறிமுகமானவர்கள் ஆனால் ஆரம்பத்தில் இருந்த ஒரு பொழுதுபோக்கு. எபிசோடுகள் நகர நகர அது கலைந்து விட்டது என்று சொல்லலாம்.

சங்கடத்தில் முடிந்த குக் வித் கோமாளி:

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாராலும் பார்த்து, சிரித்து, சந்தோஷப்பட வைத்த இந்த குக் வித் கோமாளி இன்று எல்லாரும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்று சொல்லலாம். பிரபலமான விஜேக்கள் இரண்டு பேர் சண்டை இட்டது தான் இதற்கு காரணம்.

இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தயாரித்து வழங்கியவர் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோஸ் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக சமையல் கலை வல்லுநர் தாமு அவர்களும், சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி திரு ரங்கராஜ் அவர்களும் இருக்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர்கள் ரக்சன் மற்றும் மணிமேகலை அவர்கள். கடந்த நான்கு சீசன்களாக ரக்சன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த சீசனில் தான் விஜே மணிமேகலை ரக்சன் உடன் இணைந்து தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

இதற்கு முன்பாக நிறைய நிகழ்ச்சிகளில் மணிமேகலை தொகுத்து வழங்கி அதில் பாராட்டுகளையும் பெற்று வந்தார். ஆனால் இந்த களம் ஒரு புதிய களம் போல. ஏனென்றால் இந்த இடத்துக்கு ஏகப்பட்ட போட்டிகளும் பொறாமைகளும் இருந்திருக்கிறது. எல்லாரும் தொகுத்து வழங்குவதில் கெட்டிக்காரர்கள் என்று ஆளாளுக்கு போட்டிக்கு வந்து கடைசியில் மணிமேகலைக்கு அந்த சீட் கிடைக்க. ஆரம்பித்தது பஞ்சாயத்து. அறந்தாங்கி நிஷாவும் இதற்கு போட்டி போட்டவர் தான் ஆனால் அந்த போட்டி ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.

ஆனால் இந்த சீசன் ரசனைக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வேறு சில கண்டன்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த நிகழ்ச்சியை நாரடித்து விட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

சீசன்கள்:

குக் வித் கோமாளியில் கடந்த நான்கு சீசன்களில் நம்மை ரசிக்கவும், சிரிக்கவும் வைத்த விஷயங்கள் எல்லாம் ஏன் இந்த சீசனில் முகம் சுளிக்க வைத்தது என்று பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால் அது கண்டன்ட். ஏனென்றால் ஷோவிற்கு அதிக கண்டெண்டுகள் யார் தருவார்களோ அவர்களே கேமராவில் அதிகம் காட்டப்படுகிறார்கள். அதற்காக தேவை இருக்கிறதோ தேவையில்லையோ எதையாவது செய்து எபிசோடில் அதிக நேரம் தெரிந்து விட வேண்டும் என்று ஆளாளுக்கு கங்கணம் கட்டி விட்டது போல செய்து கொண்டு இருப்பதினால் குக் வித் கோமாளி ஷோவிற்கே உரித்தான எதார்த்தம் இந்த சீசனில் இல்லாமல் போனது தான்.

மேலும் குக் வித் கோமாளி என்ற ஷோ வால் பிரபலம் அடைந்த புகழ் அவர்களுடைய கண்டன்டுகள் எல்லாம் ரசிக்கும் படியாக தான் இருந்தது. அது என்னவென்றால் குக் யாராவது அழகாக இருந்தால் அவர்களிடம் சில்மிஷம் செய்து அடி வாங்குவது அவமானப்படுவது என்று அவருக்கே உரித்தான உடல் மொழியில் செய்து அனைவரையும் அசத்தி விடுவார். குரேஷியும் அவருக்கே உரித்தான டைமிங் காமெடியில் அசத்துவார். மேலும் சுனிதாவின் தமிழும் பாடல்களும் ரசிக்க வைக்கும். மேலும் கடந்த நான்கு சீசன்களில் கண்டன்ட், ரொமான்ஸ் கன்டென்ட், பாடல்கள் கண்டன்ட் என்றும் எப்படியும் ஒரு சூப்பர் சிங்கர் பாடகர்களை கலந்து கொள்ள வைத்து நிகழ்ச்சி தோய்வில் இருக்கும்போது பாடல்கள் பாடி ரசிக்க வைத்தனர்.

நடுவர்களாக இருந்த சமையல் கலை வல்லுனர் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு அவர்கள் நம் மனதில் பட்டு குட்டி, எனவும் தாமு அப்பா என்றும் இருந்தனர். அவர்களும் கோமாளிகளுடனும், குக்குகளுடனும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாகவே இருந்தது.

ஆக இப்படி மக்களை ரசிக்க வைத்து சிரிக்க வைத்து மகிழ வைத்த எல்லோருக்கும் “ஸ்ட்ரெஸ் பஸ்டர்” ஆக இருந்த குக் வித் கோமாளி ஷோதான் இன்று அனைவரிடத்திலும் பேசு பொருளாக மாறிவிட்டது.

குக் வித் கோமாளி சீசன் 5:

கடந்த சீசன்களில் இருந்த குடும்ப உணர்வு கன்டென்ட், ரொமான்ஸ் கண்டன்ட் எல்லாம் இந்த சீசனில் முகம் சுளிக்க வைத்தது தான்  ஹய் லைட். இந்த கண்டன்டுகள் எல்லாம் இந்த சீசனில் ஓவர் கண்டன்ட்டாக அமைந்தது தான் இந்த ஷோவின் தோல்வி. ஏனென்றால் இந்த சீசனில் குக்காக வந்தவர்கள் செய்த மோசமான சியல்கள். விஜே பிரியங்கா மற்றும் வி டிவி கணேஷ் அவர்களின் ரொமான்ஸ் பார்ப்பதற்கு முடியாமல் இருக்க, பிரியங்காவும் இர்பான் அவரும் ஒருபக்கம் அக்காடா தம்பி டா என்ற உறவு இன்னும் படுமோசம். இதில் ராமரும் கூட சேர்ந்து பிரியங்கா உடன் ரோமன்ஸ் கன்டென்ட் கொடுக்க பார்க்க முடியவில்லை.

ஏனென்றால் கடந்த நான்கு சீசன்களில் இல்லாத அளவுக்கு ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இதில் அதிகம் இடம் பெற்றது தான் காரணம். புகழ் அவர்களும் குரேஷி அவர்களும் அவர்களின் தனித்துவமான பாணியில் ஏதோ செய்திருக்க, இந்த பக்கம் பிரியங்கா-ராமர், பிரியங்கா-விடிவி கணேஷ், பிரியங்கா-இர்பான் என்று  ஜோடி சேர்ந்து எதோ ஒரு கன்டென்ட்களை தருவோம் மொக்கை போட்டது தான் மிச்சம். எப்படியும் கேமராவில் காட்டி விடுவார்கள் என்ற நம்பிக்கை.

சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பூஜா அவர்கள் சிறந்த பாடகர். ஆனால் அவரை இந்த நிகழ்ச்சியில் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லலாம். கண்டெண்டுக்காக எலிமினேஷனும் நடந்தது போல் தான் இருந்தது. இந்த குக் வித் கோமாளி ஷோ புகழும் குரேஷியும் ஒரு பக்கம் திவ்யா துறைசாமியிடம் வம்பு இழுக்க ரொமான்ஸ் கண்டன்ட் பார்பதற்கு நன்றாக தான் இருந்தது. ஆனால் இந்த பிரியங்கா-விடிவி கணேஷ், பிரியங்கா-ராமர், ரொமான்ஸ் கன்டென்ட் பார்க்கவே முடியவில்லை. ராமர் அவர் தன் வேலையை நல்லபடியாகத்தான் பார்க்கிறார் ஆனால் ஏதாவது செய்து கன்டென்ட் கொடுத்தே ஆக வேண்டும் என்று முனைப்புடன் போய் ராமரிடம் சில்மிஷம் செய்வது தங்கதுரையை வேண்டுமென்றே உயர்த்திப் பேசுவது என்று தேவை இல்லாத கன்டென்ட்களை தூவி பிரியங்காவைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை.

எப்படியோ இந்த சீசன் ஆரம்பிக்கும் போதே பிரியங்கா இருக்கிறார் அவருக்காக தான் இந்த ஷோ என்று ஆகிவிட்டது போலும் அதுவே கடைசியில் “டைட்டில் வின்னர்” பிரியங்கா என்றாகி விட்டது. விஜய் டிவிக்கு சொம்பு தூக்கி கொண்டு இருந்த பிரியங்காவிற்கு இன்று விஜய் டிவியே சொம்பு தூக்கிய தருணம் நடைபெற்றது.

மணிமேகலை VS பிரியங்கா:

இவர்கள் இருவருமே நல்ல வி.ஜே தான். மணிமேகலையும் கடந்த சில வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கிக் கொண்டு இருந்தவர் தான். ஆனால் போதிய வாய்ப்பு கிடைக்காததால் வேறு சில  நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை என்டர்டைன் செய்து கொண்டு இருந்தவர். ஆனால் மாகாபா ஆனந்த் அவர்களால் விஜய் டிவிக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்று எல்லோரும் கவரக்கூடிய வகையில் வளர்ந்திருப்பது பிரியங்கா தேஷ்பாண்டே தான்.

ஏனென்றால் இப்பொழுது விஜய் டிவியில் எந்த ஷோவும் தொகுத்து வழங்குவதற்கு மாகாபா. அவர் இல்லையேல் பிரியங்கா என்றாகிவிட்டது. பிரியங்கா வந்த பிறகு தான் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்த பல வி.ஜே.கள் இன்று காணாமலே போனார்கள். அதுமட்டுமில்லாமல் பிரியங்கா விற்கு அடங்கியிருந்தால் இருக்கலாம் இல்லை என்றால் சேனலை விட்டு வெளியேறலாம் என்ற நிலை அரங்கேறியது.

அதில் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பாவனா, நட்சத்திரா, அனிதா சம்பத், ஜாக்லின் போன்றவர்கள். இவர்கள் செய்யாத வேலையை மணிமேகலை செய்தது தான் மணிமேகலையின் ஹை லைட். அது என்னவென்றால் குக் வித் கோமாளி சீசன் 5 ஷோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருக்கிறேன் நீங்கள் வந்தது குக்காக  இருக்கத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள் என்னை என் வேலையை செய்ய விடுங்கள் என்று சண்டை போட்டது தான்.

சண்டை போட்டுவிட்டு மணிமேகலை சமூக ஊடகங்களில் இனி நான் கொக்கு வித் கோமாளி ஷோவில் தொடர மாட்டேன் என்று கூறி அதற்கு உண்டான விளக்கத்தையும் அளித்தார். இதுதான் இந்த குக் வித் கோமாளி ஷோவை புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தன்னை டாமினேட் செய்வதாகவும் என் வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்னால் என் வேலையை செய்ய முடியவில்லை அதனால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் எனக்கு எல்லாத்து விடவும் சுயமரியாதை மிகவும் முக்கியம் என்றும் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு பூதாகரமாக வெடிக்க அது விஜே பிரியங்கா தான் என்று அவரை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். என்னை பொருத்தவரை மாகாபா ஆனந்த் சொன்னதை நாமும் பின்பற்றுவோம் இது இருவருக்கும் ஆன சண்டை நாம் வேடிக்கை பார்ப்போம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply