இசை வெளியீட்டு விழா:
வேட்டையன் படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் பக்கத்தில் இருக்கும் நேரு ஸ்டேடியம் இல் 20-9-2024 அன்று கோலாகலமாக நடந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்னவென்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் படம். ஏன் சூப்பர் ஸ்டாருக்கு இவ்வளவு பில்டப் என்று பார்க்கிறீர்களா? ஏனென்றால் நானும் ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகன் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ன நான் சொல்லுவது சரிதானே. அப்படி என்ன ரஜினிகாந்த் செய்த செயல்.
டிஜே ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பகத் பாசில், ரானா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி என்று பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “வேட்டையன்”.
இந்த படத்தோட இயக்குனர் டி ஜே ஞானவேல், “ஜெய் பீம்” அப்படின்னு ஒரு முக்கியமான படத்தை இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்த ஒரு நல்ல இயக்குனர். இருளர் இன மக்களின் வாழ்வியலையும், சூழல்களையும் மிக எதார்த்தமாக காட்டியிருப்பார். முதல் படமே இப்படி இருக்க அடுத்து வரும் படங்கள் கண்டிப்பாக இவர் ஒரு நல்ல படமாக தான் இயக்குவார் என்ற நம்பிக்கையை தமிழ் ரசிகர்களுக்கு தந்தவர். அப்படி அவர் தேர்ந்தெடுத்த கதைக்கலம் நம்ம சூப்பர் ஸ்டார் உடன் என நிகழும் போது தமிழ் ரசிகர்களிடையே இந்த படத்தோட எதிர்பார்ப்பு எகிர ஆரம்பிச்சது. கண்டிப்பா இந்த வேட்டையன் படம் இயக்குனரோட பார்வையில ஒரு கமர்சியலா ஒரு நல்ல படம் வரும் அப்படின்னு எதிர்பார்க்கலாம்.
மறந்துறாம இதையும் பாத்திருங்க:த.வெ.க மாநாட்டிற்கு சிக்கலா?
இசையமைப்பாளர் அனிருத்:
இசை வெளியீட்டு விழா அப்படின்னாலே படத்தோட இசையமைப்பாளர் அவர்களுக்கு உண்டான இடம். அதுவும் இந்த படத்தோட இசையமைப்பாளரை பற்றி சொல்லவே வேண்டாம். இவ்வளவு சின்ன வயசுல சூப்பர் ஸ்டாருக்கு ஏற்றார் போல நல்ல பாடல்கள், நல்ல தீம் இசை, நல்ல பிஜிஎம் கொடுப்பதில் இவர் வல்லவர். அவர்தான் இசையமைப்பாளர் அனிருத்.
அவர்கள் சமீபத்தில் வெளியான “மனசிலாயோ” என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கு பார்த்தாலும் பாடல் ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அனிருத் அவர்களும் இணைந்த நான்காவது படம் இந்த வேட்டையன். இந்த படத்திலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்றார் போலவே இசையமைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
இதனைப் பற்றி இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறுகையில் அனிருத் என்னுடைய மகன் போல என்று கூறியிருக்கிறார் இதை கேட்ட அனைவரும் நெகிழ்ந்தனர்.
ரஜினிகாந்த் பேசிய ஹைலைட்:
இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது தான் ஹைலைட் அவர் கூறுகையில்,
நான் முதன் முதலில் சென்னை வந்த பொழுது எனக்கு கன்னடம் மட்டும்தான் தெரியும். தமிழ் சுத்தமாக தெரியாது. அப்படி இருந்து “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களாகிய ரசிகர்கள் தான்” என்று கண்கலங்கி கூறியிருக்கிறார். பின்பு அவருக்கே உரித்தான குட்டி ஸ்டோரி கூறுகையில் அரங்கமே சிரிப்பலகில் ஆழ்ந்தது.
இயக்குனர் டிஜே ஞானவேல் பற்றி கூறுகையில், முதலில் என் மகள் சௌந்தர்யா தான் டி ஜே ஞானவேல் அவர்கள் ஒரு கதை வைத்துள்ளார் நீங்கள் கேளுங்கள் என்று சொன்னார்கள். பிறகு தான் நான் அந்த கதையை கேட்டேன். இயக்குனர் ஞானவேலுவிற்கு இது இரண்டாவது படம். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்ற வில்லை. அவர் ஒரு பத்திரிக்கையாளர். அவர் சிந்திக்கும் முறையும் அவரின் கடின உழைப்பும் என்னை இந்த படத்துக்குள் கொண்டு வர வைத்தது.
நான் அவரிடம் ஒன்னே ஒன்னு தான் சொன்னேன் என் ரசிகர்கள் என்னை எப்படி எதிர்பார்ப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். எவ்வளவு படம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் இதே கதையை கமர்சியல் ஆக பண்ணி கொடுங்கள் என்று கேட்டேன் அவரும் சம்மதித்தார்.
மேலும் படத்தில் மஞ்சு வாரியர் ஒரு நல்ல கதாபாத்திரம், நன்றாகவே நடித்துக் கொடுத்தார். எப்படி ஜெயிலர் படத்தில் தமன்னா உடனான பாடலில் எனக்கு இரண்டு சீன் வைத்தார்களோ அதே போல மனசுலையோ பாடலிலும் எனக்கு ரெண்டு சீன் தான் என்று தனக்கே உண்டான பாணியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கிழிந்த ஜீன்ஸ், கண்ணாடி போட்டு ஒரு பொண்ணு கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நான் அவர்கள் யாரென்று கேட்டேன் அப்பொழுது தான் தெரியும் அவர் ‘துஷாரா விஜயன்’ என்று. அவருக்கும் நல்ல கதாபாத்திரம்தான். படத்தில் வில்லன் கதாபாத்திரம் ராணா என்பவர் நடித்திருந்தார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்க நிறைய விஷயம் பேசுவோம் ஆனால் சார்ட் ஓகே என்று வரும்போது அவரின் வில்லத்தனமான பார்வை என்னையே பயமுறுத்தியது. அவரும் அவரின் கதாபாத்திரத்தை நன்கு நடித்துக் கொடுத்தார்.
பிறகு பகத் பாசில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதலில் அவரிடம் கேட்டபோது கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறி எனக்கு இந்த படத்திற்காக காசு கூட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு இரண்டு மாதம் பொறுத்து இருக்க வேண்டும் ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் படங்கள் உள்ளது என்று கூறிவிட்டார். ஆனால் எனக்கோ அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் போயிட்டு இருக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் எப்படி என்று யோசித்தேன். பின்பு லோகேஷ் கனகராஜ் இடம் சூட்டிங் ஒரு இரண்டு மாதம் தள்ளி வைப்போமா என்று கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டார். என்று கூறினார்.
ரஜினி புகழாரம்:
படத்தில் அமிதாபச்சன் நடித்தது பெரும் பாக்கியம். ஏனென்றால் அவர் பட்ட கஷ்டம் எல்லாம் கூற முடியாது. அவர் இந்த நிலைமையை அடைவதற்கு ரொம்பவே கஷ்டப் பட்டவர் அவரைப் பற்றி எல்லாம் இப்போது இருக்கும் 2k கிட்ஸ்’க்கு தெரியாது. சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் அமிதாபச்சனுடன் நடித்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
பின்பு வழக்கம் போல சூப்பர் ஸ்டாரின் குட்டிக்கதை, பொதுவாக ரஜினிகாந்தின் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதை ஒரு ஸ்பெஷல் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக்கதை கூறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
ரஜினியின் குட்டிக்கதை:
இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இயக்குனர் டி ஜே ஞானவேல் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினார். நான் என்ன என்று கேட்கையில், சார் நான் தளபதி படம் 17 முறை பார்த்தேன், ஆறிலிருந்து அறுபது வரை என்ற திரைப்படம் என்னுடைய ஃபேவரைட். நீங்கள் அதுபோல ஒரு எதார்த்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
அப்பொழுது நான் “உத்தர காசியில்” ஒரு டோபி ஒருவர் இருந்தார் அவர் துணிகளை துவைப்பதற்காக கீழ் இருக்கும் ஆற்றுக்கு தான் வர வேண்டும் அப்படி ஒரு நாள் தன் கழுதையை கூட்டிக்கொண்டு அந்த ஆற்றுக்கு வருகையில் அந்த கழுதை தொலைந்து விட்டது. அந்த கழுதை தான் அந்த டோபிக்கு உயிர், மூச்சு எல்லாமே. அந்த கழுதை தொலைந்ததும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு யார் டோபியிடம் என்ன சொன்னாலும் சிரித்துக்கொண்டே இருந்தார். இதனைப் பார்த்து அவரின் மனைவி குழந்தைகள் எல்லாம் அவரை விட்டு பிரிந்து போய் விட்டார்கள்.
பிறகு கழுதை தொலைந்து போன துக்கத்தில் ஒரு இடத்தில் அமைதியாய் போய் ஒரு உட்கார்ந்து விட்டார். அவரைப் பார்த்து அனைவரும் அவரை சாமியார் ஆக்கிவிட்டார்கள். மக்கள் எல்லோரும் அவரிடம் குறி கேட்க ஆரம்பித்து, பின்பு அவரிடம் சில சிஷ்யர்களும் சேர்ந்து விட்டார்கள். பிறகு ஒருநாள் அவருக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்தது. அப்போது ஒரு கழுதை கத்தியது உடனே அந்த டோபி ‘என் கழுதை எங்கே, என் கழுதை எங்கே’ என்று கேட்க, ஒரு சிஷ்யன் நீங்கள் ஒரு சாமியார் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கூறினார். அதற்கு அவர் “யோவ் நான் டோபியா” என்றார். இதனை வெளியில் சொல்லிடாத எல்லோருக்கும் தெரிந்தால் கதை கந்தலாகி விடும் என்று சொன்னார்.
அதற்கு ஞானவேல் இதை எதற்கு என்னிடம் சொன்னீர்கள் என்று கேட்டார், அதற்கு அந்த “டோபியே நான் தான்” என்று சொன்னேன்.
ரஜினி கூறிய கதையின் விளக்கம்:
நீங்கள் தளபதி படத்தில் ஓகே ஆன சீன்ஸ் மட்டும் தான் பார்த்தீர்கள் ஆனால் அதற்கு எத்தனை டேக் போய் உள்ளது, அதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும்.
முள்ளும் மலரும் படமும் அப்படித்தான் அந்தப் படத்தில் பாலு மகேந்திராவும், மகேந்திரனும் சேர்ந்து தான் என்னை அப்படி நடிக்க வைத்தார்கள்.
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இன்னும் மோசம், வசனங்களை பார்த்தால் தலையை சுற்றி விடும். சுமார் 11 பக்கம் வசனம் இருக்கும். என்னடா இது, என்ற அளவில் ஆகிவிடும். அப்போ முத்துராமன் தான் என்னை கூப்பிட்டு உன்னால் பேச முடிந்த அளவிற்கு பேசு என்று கூறி நடிக்க வைத்தார்.
அதேபோல ஆறிலிருந்து அறுபது வரை படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டேன் அதன் பின் அனைவரும் சேர்ந்து பேசி என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தார்கள் இவ்வளவு ஏன் அந்தப் படம் ஓடாது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அந்தப் படம் பெரிய ஹிட் ஆகிவிட்டது பின்பு தான் போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, பைரவி போன்ற படங்களில் நடித்து அப்படியே பிழைத்துக் கொண்டேன். நீங்கள் சொல்வது போல் மீண்டும் என்னை புவனா ஒரு கேள்விக்குறி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களின் மாதிரி நடிக்க வைப்பதற்கு எதிர்பார்க்காதீங்க. இப்ப எப்படி வழக்கமா நடிக்கிறனோ அதேபோல நடிக்கிறேன். பழையபடி நடித்தேன் என்றால் “கதை கந்தலாகி விடும்” என்று சொன்னேன். இந்த கதையை கூறி முடிக்கையில் அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது என்று சொல்லலாம்.
ஆக வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளிவர இருக்கும் இந்த வேட்டையன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் இத்திரைப்படத்தை வரவேற்போம்.