இன்றைக்கு நாம் எந்த படத்தை விமர்சனம் செய்யப் போகிறோம் என்றால், தமிழரசன் பச்சமுத்து இயக்கி, அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலசரவணன், தேவதர்ஷினி இவர்கள் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து படத்தின் திரைவிமர்சனத்தை பார்ப்போம். பறந்ததா லப்பர் பந்து ? பாத்திருவோம் வாங்க.
லப்பர் பந்து:
லப்பர் பந்துன்னு பெயர் எதுக்கு பொருந்துச்சோ இல்லையோ இந்த படத்தோட திரைக்கதைக்கு ரொம்ப அழகாவே பொருந்துச்சு. ஏன்னா படம் முழுக்கவே சும்மா 6, 4 னு பவுண்டரி லைன்ல பறக்கவிட்டுடாங்கன்னு தான் சொல்லணும். இந்த லப்பர் பந்து படத்தின் கதையைப் பற்றி சுருக்கமாக சொன்னால் அட்டகத்தி தினேஷ் ஒரு ஓவியர், பூ மாலை இவருடைய கதாபாத்திரத்தோட பெயர் என்றாலும் ஊருக்குள்ள இவரை “கெத்து” என்று தான் அழைப்பார்கள். உள்ளூரில் கிரிக்கெட் விளையாட்டில் ஆட்டக்காரர்.
அதே ஊரில் பந்து வீச்சு மூலமாக “அட்டகத்தி தினேஷ்” கெத்தை திணறடிக்கிறார் ஹரிஷ் கல்யாண் (அன்பு) கதாபாத்திரத்தில். இப்படி போய்க்கொண்டு இருக்க திரைக்கதையில், அட்டகத்தி தினேஷ் மகள் சஞ்சனாவிற்கும் ஹரிஷ் கல்யாண் க்கும் காதல் மலர்கிறது. கிரிக்கெட் ஈகோவால் பகையாளியாக இருக்கிற கெத்துவும், அன்புவும் சேர்ந்தார்களா? அன்புவின் காதல் வெற்றியா தோல்வியா? கிரிக்கெட்டை மையமாக வைத்த கதையில் கிரிக்கெட்டால் என்ன நடந்தது என்பதே மீதி கதை.
மறக்காம இதையும் பாத்திருங்க:ஆஸ்கர்க்கு செல்லும் ஆறு தமிழ் திரைப்படங்கள்
கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்களை பார்த்திருந்தாலும் கிராம சூழலில் எப்படி கிரிக்கெட் போட்டிகள் என்னென்ன அலப்பறைகள் என்று அப்பட்டமாகவும் எதார்த்தத்தின் உச்சமாகவும் படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து. ஒரு ரப்பர் பந்து ஐந்து ரூபாய்க்கு விற்கும் போது கதை தொடங்கி 55 ரூபாய்க்கு விற்கும் போது கதை முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கிறது என்பதே இந்த ரப்பர் பந்து.
இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஒரு அழகான பாத்திரம் அதை நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். மனைவிக்கு அடிபணிவது, ஈகோவால் பார்வையிலே மிரட்டுவது, மனைவியுடன் காதல் என்று அவர் கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணும் அவருக்கு குடுத்த கதாபாத்திரத்தை சரியான வழியில் பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். இவர்களுடன் அட்டகத்தி தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிக்க, மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, நகைச்சுவைக்கு பாலசரவணன் ஜென்சன் திவாக,ர் இவர்களுடன் காலி வெங்கட் மற்றும் பலர் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள் என்று சொல்லலாம்.
“பார்க்கிங்” திரைப்படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாணிற்கு இது ஒரு நல்ல படம். ஈகோ மையமான கதை என்றாலும் திரைக்கதையில் உள்ளூர் ஆட்டம், சாதிய பாகுபாடு, பாலின பாகுபாடு என்று அனைத்தையும் பேசி இருக்கிறது இந்த லப்பர் பந்து திரைப்படம்.
சிறப்பம்சங்கள்:
அட்டகத்தி தினேஷ் ஒரு தீவிர கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய ரசிகன் மைதானத்துக்குள் களமிறங்கும் போது “நீ பொட்டு வச்ச” பாடல் வருவது உண்மையிலேயே ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்.
ஜெராக்ஸ் கடையில் காளி வெங்கட் பாலசரவனிடம் ஜெராக்ஸ் எடுக்கையில் “தம்பி மாதிரி தம்பி இல்லை’ல” என்று பால சரவணன் கூறுவது அனைவரையும் யோசிக்க வைக்கிறது.
அட்டகத்தி தினேஷ் தாயார் தன் சம்மந்தி வீட்டிற்கு போக இயலும் அந்த காட்சியில் செண்டிமெண்டின் உச்சம். சாதிய பாகுபாட்டை சுமூகமாகவும் போற போக்கில் திரைக்கதையுடன் ஒன்றி வைத்திருப்பது இயக்குனரின் திரைக்கதை யுத்தி.
காலி வெங்கட்டின் மகளும் கிரிக்கெட் விளையாடுவது அந்தப் பெண்னை அணியில் சேர்க்கும் போது பாலின பாகுபாட்டால் அந்தப் பெண்ணை நிராகரிப்பது அந்த காட்சியில் அப்போது “இது என்ன ஆம்பள திமிரா” என்ற வசனம்,
கடைசியில் திறமையே வென்று இந்த விளையாட்டில் சாதி, மதம், பாலினம் என்று எந்த பாகுபாடு இல்லாமல் திறமை தான் முக்கியம் அது இருந்தாலே போதும் என்ற கிளைமாக்ஸ் அனைவரையும் நிவர்த்தி பண்ணியது என்றே சொல்லலாம். அனைவருக்கும் தெரிந்த கிளைமேக்ஸ் தான் இருந்தாலும் திரைக்கதையோடு செல்லும் போது உண்மையிலேயே இந்த ரப்பர் பந்து நம் மனதில் அடிக்கப்பட்ட ஒரு ரெண்டு தென்னைமர உயர சிக்சர் தான். இந்த குழுவிற்கு இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக நன்றிகளும் பாராட்டுக்களும்.