ஆஸ்கர்க்கு செல்லும் ஆறு தமிழ் திரைப்படங்கள்

ஆஸ்கர்க்கு செல்லும் ஆறு தமிழ் திரைப்படங்கள்

ஆஸ்கர் விருது:

நம் தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது என்பதை அலசி விட்டு வருவோம் வாங்க. ஆஸ்கர்க்கு செல்லும் ஆறு தமிழ் திரைப்படங்கள்.

உலக சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கர் விருது என்பது ஒரு திரைப்படத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றது. ஆஸ்கர் விருது என்பது 1929 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

சினிமா உலகில் ஆஸ்கர் அவார்டு ஒரு மிகப்பெரிய கனவாக பார்க்கப்படுகிறது. அனைத்து சினிமா கலைஞருக்கும் இந்த விருது எப்படியாச்சும் வாங்கி தன் திரை துறையினர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற கனவும் லட்சியமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அப்படி இன்றைய தலைமுறைக்கு ஆஸ்கர் விருது என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் “இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்” அவர்கள் தான். ஏனென்றால் ஒரு கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நினைவாக மாற்றி அமைத்து கொடுத்தவர். மேலும் இரண்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்ற முதல் தமிழர் என்ற பெருமை வாங்கித் தந்தவர் ஏ ஆர் ரகுமான் அவர்கள்.

அப்படி 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் அடுத்த வருடம் மார்ச் இரண்டாம் தேதி அதாவது இந்திய தேதி படி மார்ச் மாதம் மூன்றாம் தேதி நடைபெ றுகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது ஆனது வழங்கப்பட்டு வருகிறது.

மறந்துறாம இதையும் பாத்திருங்க:இது இல்லாமல் கேரள உணவு இல்லை

சரி இப்பொழுது பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முன் நம் தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது. ஆஸ்கர்க்கு செல்லும் ஆறு தமிழ் திரைப்படங்கள்.

ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் திரைப்படங்கள்:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதல் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் 1969 ஆம் ஆண்டு வெளியான “தெய்வ மகன்” திரைப்படம் தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அப்பா, இரண்டு மகன்கள் என அந்த காலகட்டத்திலேயே மூன்று வேதங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பார். இந்த தெய்வமகன் திரைப்படம் தான் ஆஸ்கர் விருதிற்கு சென்ற முதல் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது.

தெய்வமகன் திரைப்படத்திற்கு பிறகு பதினெட்டு ஆண்டுகளில் எந்த ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. மேலும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் “நாயகன்” திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு சென்றது. மேலும் இந்த நாயகன் திரைப்படம் ஆஸ்கருக்கு சென்ற இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமை பெற்றது.

பின்பு 1990 ஆம் ஆண்டு ரகுவரன், ரேவதி, பேபி ஷாமிலி மற்றும் குழந்தைகளின் பட்டாளமே நடித்த “அஞ்சலி” திரைப்படம்தான். குழந்தைகளுக்கான ஒரு நல்ல திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

பிறகு 1992 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமலஹாசன், ரேவதி, கவுதமி, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் “தேவர் மகன்”. தேவர் மகன் திரைப்படமும் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த செய்த படமாகும். இந்த திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

1995இல் கமலஹாசன் அர்ஜுன் நடிப்பில் வெளியான “குருதிப்புனல்” என்ற திரைப்படமும், இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட படைப்பில் “இந்தியன்” திரைப்படமும். 2000 ல் கமலஹாசன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களே.

ஆஸ்கர் விருதில் மொத்தம் 29 திரைப்படங்கள்:

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 29 திரைப்படங்கள் களம் இறங்குகிறது.

இதில் “சிறந்த வெளிநாட்டு திரைப்படம்” என்ற பிரிவில் இந்தியாவிலிருந்து 29 திரைப்படங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதில் 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ஆறு தமிழ் திரைப்படங்களின் விவரம் இதோ,

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷம் நாராயணன் இசையில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் இது ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்து 8 வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை ரசிக்கும் வகையில் திரில்லர் அதிரடி கதைய அம்சத்தை கொண்டு நகைச்சுவை கதை களத்தில் உருவாக்கியுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை:

மாரி செல்வராஜ் அவர்களின் எதார்த்தமான இயக்கத்தில் நடிகர் கலையரசன், நடிகை நிகிலா விமல், பொன் வேல் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த வாழை திரைப்படம். மக்களின் இயல்பான கதைகளை கொண்ட வாழ்க்கை அமைப்பை திரையில் காட்டி அனைவரையும் ரசிக்க வைத்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். மேலும் இந்த திரைப்படம் மாரிசெல்வராஜ் அவர்களின் பயோபிக் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா:

தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ் சினிமா வில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் இந்த மகாராஜா. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கி அனுராக், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்ராஜ் (நட்டி) உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

ஜமா:

அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி அவரே கதையின் நாயகனாகவும் நடித்த திரைப்படம் ஜமா. மேலும் இந்த திரைப்படத்தில் மணிமேகலை, வசந்து மாரிமுத்து, அம்மு அபிராமி, சேர்த்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள் என்று பலர் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை எதார்த்தமாக காட்டியிருக்கும் படம் தான் ஜமா.

கொட்டுக்காளி:

2021 ஆம் ஆண்டு கூழாங்கல் என்ற மிகப்பெரிய படைப்பை தந்த பி எஸ் வினோத் ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவான திரைப்படம் இந்த கொட்டுக்காளி. இந்த படம் வெளியாகி நிறைய விருதுகளை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கலான்:

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் தங்கலான். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி தெருவோத்து உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படங்களுக்கு வாழ்த்துக்கள்.  இத்தனை படைப்புகளை நமக்கு வழங்கிய இந்த திரைப்படங்களின் இயக்குனர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

மேலும் இந்த படங்களும் விருதுகளை வாங்குவதற்கு நம்மளும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply