முத்தியது சண்டை -விஜே.சித்து VS டிடிஎஃப் வாசன்

முத்தியது சண்டை -விஜே.சித்து VS டிடிஎஃப் வாசன்

வெல்கம் டு விஜே சித்து வ்லாக்ஸ்:

முத்தியது சண்டை -விஜே.சித்து VS டிடிஎஃப் வாசன். சமீப காலமாக யூடியூப் வாயிலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு முகம் யார் என்றால் அது வி.ஜே சித்து தான். ஏனென்றால் மிக குறுகிய காலகட்டத்தில் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறார் இவர்.

இவரின் வீடியோக்கள் யூடூப் மட்டுமின்றி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்ற அனைத்திலும் ட்ரேண்ட் ஆகி கொண்டே தான் இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்களுக்கு பரிச்சயமான நோய் ஒன்று தொற்றிக்கொண்டு வருகிறது, அது என்னவென்றால் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், அவுட் ஆப்ஜோன் என்ற பல நோய்கள். இந்த நோய்களுக்கு எல்லாம் மருந்தாக விஜே சித்து வ்லாக்ஸ் உபயோகமாக உள்ளது என்று சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்படுகிறார் வி.ஜே சித்து.

இந்த நிலையில் பிரபல யூடூபரான  டிடிஎப் வாசன் அவர்கள் சார்பில் வி.ஜே சித்து மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அது என்னவென்றால், வி.ஜே சித்து தனது காரில் பயணம் செய்து கொண்டே தனது செல்போனில் பேசுகிறார் என்றும் அவரது வீடியோக்கள் ஆபாச வார்த்தைகள் இருப்பதாகவும் அந்த வீடியோக்கள் எல்லாம் சிறுவர்களாலும் பார்க்கப்படுகிறது என்றும் கூறி புகார் ஒன்று சென்னையில் “ஷெரின்” என்பவரால் அளிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஊடகங்களில் வி.ஜே சித்து மற்றும் டிடிஎஃப் வாசன் இவர்களை பற்றி பேசு பொருளாக மாறிவிட்டது. என்னதான் ஆச்சு இருவருக்கும் ஏன் இந்த சண்டை அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

மறக்காம இதையும் பாத்திருங்க:தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி

பிளாக் ஷீப் டூ விஜே சித்து  வ்லாக்ஸ்:

யூட்யூபில் “ஆர் ஜே விக்னேஷ் காந்த்” தலைமையில் “பிளாக் ஷீப்” என்ற ஒரு சேனல் கொரோனா சமயத்தில் மிகுந்த பிரபலம். அந்த பிளாக் ஷீப் சேனலில், வெப் சீரிஸ்கள், கன்டென்ட் வீடியோக்கள், குறும்படங்கள் என்று நிறைய தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. அதில் ஒரு நிகழ்ச்சியான “ஃபன் பண்றோம்” என்ற ஒரு நிகழ்ச்சி அப்படி ஒரு பிரபலம் ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் வரும் காமெடிகள் அவ்வளவு சிரிப்பலைகளை ஏற்படுத்தும்.

அந்த நிகழ்ச்சியை தொகுத்தவர் தான் வி.ஜே சித்து. இந்த நிகழ்ச்சியில் அவர் செய்யும் சேட்டைகள் பார்ப்பவர்களை சிரிப்பலைகளை வர வைக்கும். வி.ஜே சித்துவும், சேட்டை ஷெரிப் இருவரும் சேர்ந்து பங்கம் செய்து விடுவார்கள். இந்த நிலையில் தான் வி.ஜே சித்து “பிளாக் ஷீப்” சேனலை விட்டு வெளியேறி வி.ஜே சித்து வ்லாக்ஸ் என்று ஒரு புதிய சேனலை அறிமுகம் செய்கிறார். அப்படி என்ன வி.ஜே சித்து வ்லாக்ஸில் உள்ளது?.

விஜே சித்து வ்லாக்ஸ்:

பொதுவாக வ்லாக்ஸ் கண்டன்ட்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்காது. ஏனென்றால், அது தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு குழுவாக என்ன செய்கிறார், எங்கு போகிறார், என்ன சாப்பிடுகிறார் போன்றவை இடம்பெறும். அது பார்ப்போரை வெகுவாக ஈர்க்காது. ஏனென்றால் தனிப்பட்டவர்கள் சேர்ந்து செய்வதில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருந்து விடப் போகிறது.

ஆனால்  வி.ஜே சித்து வ்லாக்ஸில் இவர்கள் செய்யும் சேட்டைகள் மற்றும் லூட்டிகளை பார்த்தால் இது எல்லாம் நாமும் செய்வது போலவே இருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்வோம், நாம் எப்படி இருப்போம், நாம் என்ன பேசுவோம், நாம் என்ன செய்வோம் என்ற நம்மின் பிரதிபலிப்பு அதிகமாக இருந்ததே இந்த வி.ஜே சித்து வ்லாக்ஸின் வெற்றி என்று சொல்லலாம். அதிலும் ‘வி ஜே சித்துவும்,  ஹரிஷ் காணும்’ சேர்ந்து அடிக்கும் லூட்டி எண்ணில் அடங்காதது.

திரையில் எப்படி ஒரு கவுண்டமணி செந்தில் அதே போல சமூக ஊடகத்தின் கவுண்டமணி செந்தில் ஆக இருப்பவர்கள் வி ஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான். மேலும் வீடியோவில் ஆடியோ பதிவு செய்யாமல் போவது கேமராவை மறந்து விட்டு செல்வது என்று பல சேட்டைகளில் ஈடுபடுபவர் ‘கேம் சூரி’. மேலும் ட்ரிப் அட்வைசர் ‘பிபி’ மற்றும் இவர்களது குழுவில் ‘சி எஸ்’ இவர்கள் செய்யும் சேட்டைகளை பார்ப்பவர்களுக்கு ஒரு “ஸ்ட்ரெஸ் பஸ்டர்” ஆக அமைந்திருக்கிறது. கடைசியாக இப்போது சேட்டை ஷெரிப் இவர்களோடு சேர்ந்து பல ரகளையான கன்டென்டுகளை உருவாக்கி மக்களை சிரிக்க வைக்கின்றனர்.

வி ஜே சித்து குழுவாக சேர்ந்து கல்யாணத்துக்கு செல்வது, பற்பல ஊர்கள், பற்பல நாடுகள், பற்பல கோவில்கள் என்று எல்லா பக்கமும் சென்று அந்த இடங்கள் எப்படி இருக்கிறது? அதில் சிறப்பு அம்சம் என்ன அதில் வரும் சிக்கல்கள் என்ன என்பது இவர்களின் வீடியோக்கள் காட்டும் ஹை லைட்.

சமீபத்தில் கூட 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த போது “விஜே சித்து வ்லாக்ஸ் விருந்து” அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தினார் விஜே சித்து. இப்போதும் மிகக் குறுகிய காலத்தில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து கோவையில் விருந்து நடைபெற்று இருக்கிறது இன்னும் அந்த எபிசோட் ஒளிபரப்பாகவில்லை. இவர்கள் வீடியோக்கள் ஒரு பக்கம் இருக்க அதில் வரும் கமெண்ட்ஸ்கள் அதற்கு சமமான காமெடிகளை அளிக்கும் விதமாக இருக்கும்.

சிக்கல்களும் சர்ச்சைகளும்:

டிடிஎஃப் வாசன் என்பவர் ஒரு பைக் ரைடர். பைக் மட்டும் இல்லை பைக் சாகசங்களிலோ வல்லவர் ஆவார். இவரும் குறுகிய காலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமானவரும் கூட. இவரின் போதாத நேரம் என்னவென்றால் இவர் பிரபலம் அடையும் போதெல்லாம் மிகவும் சிக்கல்களும் சர்ச்சைகளும் பின் தொடர்ந்து கொண்டே வரும். ஏனென்றால் இவரின் பைக் சாகசம் பார்ப்பவர்களையும் இதே போல் நாமும் செய்து பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டு அதே போல் சில சிறுவர்கள் செய்து பார்த்து அதை வீடியோ பதிவேற்றும் செய்தது தான்.

டிடிஎஃப் வாசன் அவர்களுக்கும் ஒரு இளைஞர் பட்டாளமே பின் தொடர்ந்து வருகிறது. இவர் எது செய்தாலும் சர்ச்சைகளில் சிக்கி விடுவார் அது இவரது போதாத காலம் போல. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் பைக்கில் வேகமாக செல்வது, பைக் சாகசம் செய்வது எல்லாம் போதிய பாதுகாப்பு இல்லாமல் செய்வதோ அல்லது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இருப்பதோ சட்டப்படி குற்றமாகும். டிடிஎஃப் வாசன் போலவே சில சிறுவர்கள் தங்களது விலை உயர்ந்த பைக்குகளை டிடிஎஃப் போலவே  பைக் சாகசங்களில் ஈடுபடுகிறார்கள் இது சட்டத்திற்கு புறம்பானவையே ஆகும். அந்த சிறுவர்களுக்கு ஏதோ ஒன்று ஆகிவிட்டால் யார் பொறுப்பு?

ஆனால் டிடிஎஃப் வாசன் அவர்களும் இதை ஆதரிப்பதில்லை. டிடிஎஃப் வாசனும் தன் வீடியோக்களில் தலைகவசம் அணியாமல் வாகனங்களை இயக்காதீர்கள், வேகமாக செல்லாதீர்கள் என்று கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் எத்தனை பேர் இதை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த சமயத்தில்தான் காரை இயக்கிக் கொண்டே செல்போன் பேசியதால் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சட்டம் இவர் மேல் பாய்ந்தது.

அப்போது இவர் கூறுகையில் விஜே சித்துவும் இதே போல் செய்கிறார். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஒரு அறிக்கையை விடுகிறார். இந்த பிரச்சனை முற்றிபோகவே சென்னையில் உயர் நீதி மன்றத்தில் “ஷெரின்” என்பவரால் விஜே சித்து மீதி புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக நிறைய அறிக்கைகளும் விட்டதாகவும் விஜே சித்துவின் சேனல் முடங்கி விட்டது என்றும் பல தகவல்கள் சமூக ஊடகத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

விஜே.சித்து VS டிடிஎஃப் வாசன்:

அப்போது விஜே சித்து வ்லாக்ஸில் குறிப்பிட்ட ஒரு எபிசோடில் டிடிஎஃப் வாசனை குறிப்பிட்டு கலாய்ப்பது போல் ஒரு சில வசனங்கள் இடம் பெற்றது. அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து அதிக நபர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

டிடிஎஃப் வாசன் தாக்கப்பட்டாரா என்ற கமெண்ட்டுகள் ஏராளம். இந்த நிலையில் டிடிஎச் வாசன் தரப்பிலும் நண்பர் “அஜீஸ்” என்பவரும் “கேஜிஎப்” என்பவரும் விஜே சித்து வை கலாய்த்து தள்ளியிருகின்றனர். ஆனால் அதில் வரும் கமெண்ட்டுகளோ விஜே சித்து விற்கு ஆதரவாக தான் உள்ளது. இவர்களைத்தான் சமூக வலைதள வாசிகள் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

டிடிஎச் வாசன் தற்போது மஞ்சள் வீரன் என்னும் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். வெகு விரைவில் இருவரும் சண்டை இல்லாமல் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் அவரவர் திறமைக்கு ஏற்ப வீடியோக்களை பதிவேற்றம் செய்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே சமூகவாசிகளின் கருத்து இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply