கோட்:
சமூக வலைத்தளங்கள்ல சமீப காலமாகவே ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆயிட்டு இருந்துச்சு. அந்த வார்த்தை தான் “கோட்“. தோனி, சிம்பு, அஜித் னு அவங்க அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு “கோட்”ன்னு கேப்சன்ல போட்டு, புடிச்ச தலைவர்களுக்கு வீடியோவை எடிட் பண்ணி அப்லோட் பண்ணிட்டு வந்தாங்க நெட்டிசன்கள். அதுல இருந்து கோட் அப்படின்னு ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆயிட்டு வந்துச்சு. அதுவே தளபதி விஜய் அவர்களோட அடுத்த படத்தோட டைட்டில் வச்சதுதான் இயக்குனர் வெங்கட் பிரபு ஓட ஹைலைட். கோட் ஒரு அலசல்-பகுதி-2
இந்த டைட்டில் வெளியாகும் போது கோட்டுனு ஆங்கிலத்தில டைட்டில் வைத்தது ஒரு மாதிரி இருந்தாலும் சமூக வலைதள வாசிகளுக்கு பழக்கப்பட்ட வார்த்தை அப்படிங்கிறதுனால இந்த டைட்டில் பழகிருச்சு சொல்லலாம். தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம்.
மறந்துறாம இதையும் பாத்திருங்க :கோட் ஒரு அலசல்
கதை சுருக்கம்:
அப்படி என்ன இருக்கு இந்த கோட் திரைப்படத்தில், ஆரம்பக் காட்சியை ஏதோ கைப்பற்ற போற நாலு பேரு. அந்த நாலு பேர் தான் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் மற்றும் நம்ம தளபதி விஜய் அவர்கள். அங்கதான் அந்த படத்தோட வில்லன் மோகன சந்திக்கிறார்கள். அவரும் ஒரு ஏஜென்ட் தான் நாட்டுக்கு புறம்பான செயல் செஞ்சதுனால அவரை நாட்டை விட்டு ஒதுக்கிட்டாங்கன்னு நமக்கு பின்னால் தெரிய வரும். ஆனா இப்ப அந்த நியூக்ளியர் சம்பந்தமான ஒன்ன அங்கு இருந்து கைப்பற்றி அப்படியே அந்த ட்ரெயின்க்கு குண்டும் போட்டுட்டு ட்ரெயின முடிச்சு கட்டி ஹெலிகாப்டர் ல தப்பிக்கிறாரு விஜய். அந்த சமயத்தில் தான் ரசிகர்களின் மொமென்ட் “தளபதி விஜய்”னு வரும்போது தியேட்டரில் ஆரவாரம் ஆயிடுச்சு ன்னு சொல்லலாம்.
இப்பதான் கதைக்குள்ள போறாங்க இவங்க நாலு பேரும் ஒரு சீக்ரெட் ஏஜென்ட். விஜய் ஓட மனைவி சினேகா ரொம்பவே அழகா நடிச்சிருகாங்க. அவங்க வர எல்லா காட்சிகளையும் அவர்களுக்கு உண்டான தனிப்பட்ட நடிப்பு திறமையை வெளிக்கொண்டு எல்லாரும் மனசுலையும் இடம் பிடித்திருக்கிறார் என்று சொல்ல லாம்.
ரிவன்ஜ் ஸ்டோரி:
இது ஒரு ரிவன்ஜ் ஸ்டோரி தான். ஆனா திரைக்கதை வடிவமைச்ச விதம் ரொம்ப அருமை. படத்தோட பிளாட் என்னென்ன வில்லன் ஹீரோவோட பையனை வச்சு ஹீரோவை எப்படி அழிக்க நினைக்கிறாரு அப்படிங்கறது தான் இந்த ஒன்லைன் கேட்டு எங்கேயோ பார்த்த படம் மாதிரி இருக்குன்னு யோசிச்சா? எஸ், இது நம்ம கேப்டன் விஜயகாந்த் சாரோட “ராஜதுரை” படத்தோட பிளாட்டு தான்.
அதுல எப்படி சின்ன விஜயகாந்த ஆனந்தராஜ் பெரியவனா வளர்த்து பெரிய போலீசா இருக்க விஜயகாந்துக்கு ஆப்போசிட்டா நிக்க வைப்பாரோ அதேபோல இளைய தளபதியை மோகன் கொண்டு போய் வளர்த்தி தளபதி விஜய் கூட சண்டை போட வைக்கிறாரு. இதுல தளபதி ஜெயிச்சாரா இல்ல இளைய தளபதி ஜெயிச்சாங்கறது தான் இந்த படத்தோட மீதிக்கதை.
படத்துல இளைய தளபதி ஓட நடிப்பு ரொம்ப அருமைனு சொல்லலாம் ஏன்னா தளபதி விஜய் ரொம்ப நாள் கழிச்சு வில்லன், நக்கல், காமெடி, ஆக்சன், சென்டிமென்ட்னு எல்லா பக்கமும் பூந்து வெளாசி இருக்காரு. அப்பாவா வர விஜய் பொறுமையா வும் நடிப்பிலும் அசத்தி இருக்காரு. இளைய தளபதி என்டிரிக்கு அப்புறம் படம் நல்லாவே சூடு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். பாக்குறவங்களுக்கு போர் அடிக்காம நல்லாவே திரைக்கதை அமைத்த இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியே ஆகணும்.
அதுவும் இரண்டாம் பகுதியான செகண்டு ஆஃப்ல இளைய தளபதி சைக்கோ மாதிரி நடிச்சதுல “எ லயன் ஆல்வேஸ் எ லயன்” அப்படின்னு நிரூபிச்சிருக்காரு. மகனை இழந்த விஜய் அழுது கூப்பாடு போடுறதுல இருந்து, மகனை இழந்த சோகமான விஷயத்தை சினேகா கிட்ட சொல்ல வரும்போது எல்லாம் சென்டிமென்ட்ல அள்ளி தெளிச்சு இருப்பாரு விஜய்.
ஸ்பேஸ் கொடுத்த வெங்கட் பிரபு:
இது விஜய் படம் அதுனால படத்தோட கதை, திரைக்கதை எல்லாம் விஜய சுத்தி தான் இருக்கணும் அப்படிங்கிற திரைகதையை உடைத்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய ஸ்பேஸ தாராளமா கொடுத்து எல்லார்கிட்டயும் நல்லாவே வேலை வாங்கி இருக்காரு இயக்குனர் வெங்கட் பிரபு.
ரொம்ப நாள் கழிச்சு பாக்குற பிரசாந்த் இந்த படத்திலும் அவரோட கதாபாத்திரத்தை நல்லாவே பண்ணி இருக்காரு. அவரு மட்டும் இல்ல அவருக்கு ஜோடியா நடிச்ச லைலா ஆகட்டும், அவங்களுக்கு பொண்ணா நடிச்ச மீனாட்சி சவுத்ரி ஆகட்டும், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யோகி பாபு னு அவங்க அவங்களுக்கு கொடுத்த ஸ்பேஸ் தாராளமா பயன்படுத்தி ரொம்ப நேர்த்தியாகவே இயக்குனர் வடிவமைச்சிருக்கார்னு சொல்லலாம்.
படத்துல ஏகப்பட்ட சர்ப்ரைஸ் இருக்கு. அது எல்லாமே படத்தை ஒரு படி மேல கொண்டு போய் இருக்குனு சொல்லலாம். படத்தோட ஆரம்பத்துல விஜயகாந்த்தா வர விஜய் அருமை. என்ன ஒன்னு விஜயகாந்த் அவர்கள் அவராவே வந்து இருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இடைவேளை எல்லாம் பயங்கரமான திருப்பங்களோட இருந்தது எல்லாம் மேலும் சிறப்பு. ஆனால் எனக்கு இவங்க கொடுத்த பில்டப்புக்கு ட்விஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் இருந்த மாதிரி தெரியல.
இன்டர்வெல்ல தளபதி VS இளைய தளபதி னு வரும்போது, ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர் தான் நினைக்கும் போது அழகிய தமிழ் மகன் படம் எல்லாம் ஞாபகம் வந்திருச்சு. நல்ல வேலை அந்த மாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கிட்டே வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள். எனக்கு பெரிய ட்விஸ்டா இருந்தது பிரபுதேவா அவர்களோட ட்விஸ்ட் தான். ஏன்னா பிரபுதேவா இப்படி செய்வார் என்று நினைக்கல அது என்ன ட்விஸ்ட் அப்படிங்கறத படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.
கிளைமாக்ஸ்ல ரெண்டு விஜயும் சண்டை போடும்போதும் சரி அப்பா மகன் கதாபாத்திரத்திலும் சரி விஜய் தன்னோட தனிப்பட்ட நடிப்பை ரொம்பவே காமிச்சு, இவர்தான் உண்மையான என்டர்டெய்னர் அப்படின்னு மீண்டும் நிரூபிச்சிருக்காரு. அதுவும் ரெஃபரன்ஸ்னா இந்த படத்துல தான் ரெஃபரன்ஸ் ஆரம்பத்துல விஜயகாந்த் ல ஆரம்பிச்சு கடைசியில சிவகார்த்திகேயன் விட்டு தோனியில் கொண்டு போய் அஜித்துல முடிச்சது எல்லாம் வெங்கட் பிரபு ஓட பெரிய ஹைலைட்ஸ் தான்.
படத்தோட பெரிய ட்விஸ்டே எங்கனா முடியும் போது மூணாவது விஜய் காட்டுவதும் அவரு குளோனிங் முறையில நான்காவது விஜய கொண்டு வர ட்ரை பண்றதும் தான் எல்லாரையும் வாயடைக்க வச்சது னே சொல்லலாம். கடைசி சீன்ல வர “இத நான் தான் முடிக்கணும்”னு சொல்லும்போது அடுத்த பார்ட்டோட லீட் கொடுக்குறாங்க.
கோட் VS OG அப்படினு முடியும் போது உண்மையாவே இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கை தட்டணும்னு தான் தோணுது.
வசூல் நிலவரம்:
படத்தோட வசூல் முதல் நாளே 126 கோடி பண்ணுயிருக்குன்னு ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமா வெளியிட்டு இருந்தாங்க. இது விஜய் ஓட முந்தைய படமான “லியோ” ஓட வசூலை விட கம்மின்னாலும் நூறு கோடிக்கு மேல வசூல் அப்படிங்கறது சாதாரணமான விஷயம் இல்லன்னு தான் சொல்லணும். நாலு நாள் படம் ஓடினதுல சுமார் 288 கோடி வசூல் பண்ணி இருக்குன்னு இப்பவும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தரப்பு அதிகாரப்பூர்வமா அறிவிப்பும் வெளியாய் இருக்கிறது. இன்னும் நாட்கள் இருக்கு அதனால இன்னும் திரையரங்குல படம் ஓடும் இன்னும் நிறைய வசூல் பண்ணும்னு நம்பலாம்.
ரசிகர்களுக்கு சோகமான விஷயம் என்னன்னா தளபதி விஜய் சினிமாக்காக நமக்கு கொடுத்த ஆறு மணி நேரத்துல 3 மணி நேரம் முடிந்தது. இன்னும் நம்ம கிட்ட இருக்கிறது மூன்று மணி நேரம்தான்னு நினைக்கும்போது கொஞ்சம் சோகமா தான் இருக்கு. இருந்தாலும் அரசியலிலும் அவர் இதே மாதிரி விண்ணை தொட வேண்டும் என ரசிகர்கள் கூட சேர்ந்து நம்மளும் வேண்டிப்போம்.