கோட் ஒரு அலசல்

கோட் ஒரு அலசல்

தி கிரேடஸ்ட் ஆப் ஆல்டைம்:

தி கிரேடஸ்ட் ஆப் ஆல்டைம் திரைப்படம் பற்றிய பார்வை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்களுடைய 68வது படம் தான் தி கிரேடஸ்ட் ஆப் ஆல்டைம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்துல யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் நடிகர்கள், தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், ஜெயராம், அஜ்மல் அமீர் அப்படினு நடிகர்கள் பட்டாளமே இந்த படத்துக்காக இணைந்து நடித்திருக்கிறார்கள். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் அவங்களோட  ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் மூலியமா சுமார் 400 கோடி பட்ஜெட்ல உருவான திரைப்படம் தான் தி கிரேடஸ்ட் ஆப் ஆல்டைம் -எ வெங்கட் பிரபு ஹீரோ. கோட் ஒரு அலசல்

தளபதி விஜய் அவர்கள் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட போறதா அறிவிப்பு வெளியான பிறகு திரைக்கு வந்த படம் தான் இது. ஆகவே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப கிளப்பிச்சு. சமீபத்துல தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினுடைய கட்சி கொடி வெளியீடு மற்றும் அந்த கட்சியினுடைய பாடல் என விறுவிறுப்பா போய்கிட்டு இருக்க தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்களுக்கு இப்போ இந்த படத்தோட ரிலீஸ் ஒரு மெகா ட்ரீட் தான்.

செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசான கோட் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் கருத்து என்ன? மக்கள் கருத்து என்ன? அப்படிங்கறத பாத்தரலாம் வாங்க.

மறந்துறாம இதையும் பாத்திருங்க:முத்தியது சண்டை -விஜே.சித்து VS டிடிஎஃப் வாசன்

மங்காத்தா-கோட்:

தளபதி 68 அப்படின்னு சொல்லி படத்தை ஆரம்பித்தாலும் வெங்கட் பிரபு மேல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. ஏன்னா அதுக்கு காரணம் அஜித்குமார் நடிச்ச மங்காத்தா அப்படிங்கற ஒரு பிளாக் பஸ்டர் படம் தான்.

பொதுவாவே பெரிய ஹீரோ களுக்கு 50 ஆவது படம் சரியா போகாது, ஆனால் அஜித்குமார் அவர்களோட கேரியர்லையே மங்காத்தா படம் ஒரு சிறப்பான ஐம்பதாவது படம்னு சொல்லலாம். அதே எதிர்பார்ப்பு இந்த படத்துக்கும் இருந்துச்சு. அடுத்த அப்டேட்டா இந்த படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் அப்படிங்கற அறிவிப்புதான். யுவன் சங்கர் ராஜா சேர்ந்த உடனே இந்த படத்தினுடைய எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாச்சுன்னே சொல்லலாம். ஏன்னா பொதுவாகவே விஜய் அப்படின்னா அது அனிருத் அப்படின்னு ஒரு மித்து இருந்துச்சு. அதை உடைச்சு உள்ள வந்தாரு யுவன் சங்கர் ராஜா.

வெங்கட் பிரபு இப்படி எடுப்பாரு, அப்படி எடுப்பார் என்று ஒரு கூட்டம் சமூக வலைதளங்களில் கதைகளை பகிர்ந்துட்டு வரும்போது ஒரு வழியா இது டீ- ஏஜிங் ஃபிலிம்னு தெரிய வந்துச்சு. படத்துல விஜய் அவர்கள் சின்னப் பையனா வராரு அப்படின்னு, ஒரு அப்டேட்லயே எதிர்பார்ப்பையே எகிற வச்சுட்டு இருந்தாரு வெங்கட் பிரபு.

ஒரு வழியா படத்தை முடித்த உடனே படத்தோட அப்டேட் வர வர படம் எங்கேயோ போகப் போகுதுன்னு ஒரு எண்ணத்தை உருவாக்கி விட்டாங்க. ஆனா அதெல்லாம் ஒழுச்சு கட்டுற மாதிரி ரிலீஸ் ஆனது தான் படத்தோட பாடல்கள்.

படத்தோட பாடல்கள் ஒரு பக்கம் நெகட்டிவா போக யுவன் சங்கர் ராஜா மேலயும் ரசிகர்களுக்கு திருப்தி இல்லாம போகுது. பேசாம அனிருத் இசையமைச்சி இருக்கலாம் அப்படிங்கிற யோசனையை வரவச்சுட்டாருன்னு சொல்லலாம். இந்த இடத்துல தான் வெங்கட் பிரபு ஒரு சிறப்பான செய்கையை செஞ்சாரு அதான் படத்தோட ட்ரெய்லர்.

ட்ரெய்லர் ஆப் கோட்:

கோட் படத்தோட ட்ரெய்லர் அனவுன்ஸ்மென்ட்ல இருந்தே சின்ன விஜய பாக்க ரசிகர்களும் நெட்டிசல்களும் ஆவலாய் இருக்க ரிலீஸானது கோட் படத்தோட ட்ரெய்லர்.

எப்படி இருந்துச்சுன்னு கேட்டா பரவால்ல ஓகே ன்னு சொன்னவங்க எல்லாம் டி ஏஜிங் ல சொதப்பிட்டாரு. என்ன விஜய் நல்லாவே இல்லை இன்னும் நாளைய தீர்ப்பு பாணியில கமெண்ட்ஸ் வர ஆரம்பித்தது. என்னது இது படத்தை ரிலீஸ் ஆகின்ற சமயத்துல இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்ஸா அப்படின்னு பார்த்தா கடைசியா படத்தோட இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ்’னு எல்லாரும் படத்தோட பிரமோஷன் பண்ண ஸ்டார்ட் பண்ணாங்க. அப்பதான் கோட் படத்தோட ஹைப் எங்கயோ எகிற ஆரம்பிச்சது.

குட்டி குட்டி சஸ்பென்சஸ், தல ரெஃபரன்ஸ் அப்படின்னு அப்டேட் வர நெகட்டிவ் கமெண்ட்ஸ் அப்படியே பாசிட்டிவ் கமெண்ட்ஸா மாற ஆரம்பிச்சது. இன்னைக்கு இந்த படம் அதிக தியேட்டர்ல ரிலீஸ் ஆகி ரசிகர்களால கொண்டாடப்பட்டு வருது. படத்தோட டிக்கெட் புக்கிங் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்னாடியே ஓபன் பண்ணி இருந்தாலும் நான்கு நாட்களுக்கு உண்டான டிக்கெட் இன்னும் ஹவுஸ்ஃபுல்ல தான் இருக்கு.

முதல் நாள் முதல் காட்சி எல்லாம் போய் இப்போ குடும்பத்தோட பார்க்க முடியுமா? அப்படிங்கற கேள்வியை “முடியும்” அப்படின்னு மறுபடியும் தன்னோட பாணியிலேயே சொல்லி இருக்கிறார் தளபதி விஜய். ஏன்னா முதல் நாள் முதல் காட்சி குடும்பத்தோட போகலாம் அப்படின்னா அது விஜய் படமா தான் இருக்கும் அந்த அளவுக்கு வெளியான எல்லா திரையரங்கிலும் கூட்டம் அலைமோதுன்னு சொல்லலாம்..

காலை நான்கு மணி காட்சி ரத்து. ரசிகர்கள் காட்சி கிடையாது. இசை வெளியீட்டு விழா இல்ல. ஒழுங்கான பிரமோஷன் இல்ல அப்பறம் எப்படி படம் ஓடும்னா அது இப்படித்தான், “ஏன்னா இது நம்ம தளபதியோட படம் ஆச்சே”.

தி ரியல் கோட் ஆப் தமிழ் சினிமா:

நம்மளும் எப்படியாச்சும் இந்த படத்தை பார்த்திரனும் அப்படினு பார்த்தால் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கல. அப்புறம் இரவு 8 மணி காட்சிக்கு எப்படியாச்சும் அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கியாச்சு. ஆனால் இரவு 8 மணிக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே…… “ஈஸ்வரா” செல்போனே எடுக்க முடியல…. படம் பார்த்தவங்க சும்மா இருக்காங்களா படத்தோட பாதி சர்ப்ரைஸ் வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ்ல ரெயில் விட்டுட்டு இருந்தாங்க. படம் பார்த்தவங்க கொஞ்சம் பேசாம இருந்தா சரி.

சமூக வலைதளங்களில் இன்ஸ்டா கிராம், பேஸ்புக், அப்படின்னு எல்லா வலைதளங்களிலும் இந்த படத்தோட சஸ்பென்ஸ் பத்தி ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இவங்கள சமாளிச்சு எப்படியோ படம் பார்க்க உள்ள போயாச்சு. “இருந்தாலும் ரெண்டு மூணு சர்ப்ரைஸ் பார்த்துட்டேன்னு வச்சுக்கோங்களேன்” இருந்தாலும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் என்று ஒன்று இருக்கும்.

கோட்:

படம் ஆரம்பிச்சதிலிருந்து லாஸ்ட் சீன் வரைக்கும் சும்மா செஞ்சு விட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. உண்மையாவே ஒரு கம்ப்ளீட் என்டர்டைனர் விஜய வச்சு ஒரு கம்ப்ளீட் என்டர்டைன்மென்ட் ஆன ஒரு பிலிம் அப்படின்னா அது கோட்டுன்னு சொல்லலாம்.

ஏன்னா தளபதி விஜய் ஓட கரியர்லையும் இந்த படம் ஒரு முக்கியமான பங்கா இருக்கும். படம் பார்க்க போறதுக்கு முன்னாடியே இது தளபதி VS இளைய தளபதி என்று சொல்லிட்டாங்க. உடனே மனசுல வந்தது ஹீரோவும் விஜய் வில்லனும் விஜயா? அப்போ “அழகிய தமிழ் மகன்” படம் மாறி “நான்தான்டா குரு” அப்படின்னு ஏதாச்சும் ஆய்டுமோனு நெனச்சேன் ஆனா சின்ன விஜய் அதாவது இளைய தளபதி ஆக்டிங் ல பின்னி பெடல் எடுத்து இருக்காருன்னு சொல்லலாம். கத்துக்கிட்ட மொத்த வித்தையுமே இறக்கி இருக்காரு வெங்கட் பிரபு.

இப்படி ஒரு படத்த இயக்குனர் வெங்கட் பிரபு பயங்கரமா கையாண்டு இருக்கிறார். இவ்வளவு பெரிய ஸ்டார்க்கஸ்ட் யாருக்கும் எங்கயும் ஒரு தொய்வு வராமல் எல்லோருக்கும் சரிசமமா ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்து எல்லோரையும் நல்லாவே வேலை வாங்கி இருக்காருன்னு சொல்லலாம். பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா பின்னிருக்காரு. முக்கியமான விஷயம் என்னன்னா படத்தோட திரைக்கதை நல்ல விறுவிறுப்பான திரைக்கதை.

படம் சுமார் 3 மணி நேரம் மூணு நிமிஷம் ஓடுது ஆனால் இந்த மூன்று மணி நேரம் போனதே தெரியலன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு சிறப்பான திரைக்கதை. ஏகப்பட்ட திருப்பங்கள் அதாவது டெஸ்ட் அண்ட் டர்ன்ஸ். உண்மையாவே தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த கோட் ஒரு மெகா ட்ரீட் தான். படத்தோட கதை அது இதுன்னு எல்லாம் இப்போ பேச வேண்டாம். ஏன்னா நானும் இன்னொரு முறை இந்த படத்தை பார்க்கணும்னு இருக்கேன்.

நீங்க எல்லாரும் போய் தியேட்டர்ல இந்த படத்தை பாருங்க, ரசிங்க, கொண்டாடுங்க, இன்னும் இத பத்தி தெளிவா கதை, திரைக்கதை, டி-கோடிங் சமாச்சாரங்கள் எல்லாமே அடுத்த கன்டன்ட்ல பாக்கலாம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply